காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஆலோசனை நடத்த 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு..!

634

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஆலோசனை நடத்த 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக பிரதமரை சந்திக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மார்ச் 9-ம் தேதி ஆலோசனை நடத்த 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில், காவிரி பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.