காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பிரதமருடன் சந்திப்பு உட்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

384

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க பிரதமரிடம் வலியுறுத்துவது உட்பட மூன்று தீர்மானங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் நீர் குறைப்பு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.