காவிரி மேலாண்மைவாரியம் அமைக்க தவறினால், அதிமுக எம்.பிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள தயார் : நவநீதகிருஷ்ணன் ஆவேசம்.

425

காவிரி மேலாண்மைவாரியம் அமைக்க மத்திய அரசு தவறினால், அதிமுக எம்.பிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள தயாராக உள்ளதாக, நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக கூறியதால் மாநிலங்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், மாநிலங்களவையில் அதிமுக எம்பிகள் அர்ஜூனன், செல்வராஜ் ஆகியோரும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்தனர்.