மேட்டூர் அணையிலிருந்து ஜூலை 19ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

294

மேட்டூர் அணையிலிருந்து ஜூலை 19ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், காவிரியில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.18 அடியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அணைக்கு நீர்வரத்து 99 ஆயிரத்து 372 கன அடியாகவும், நீர் இருப்பு 51.72 டி.எம்.சியாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் நீர் தேவையை கருத்தில் கொண்டு 19-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். காவிரி மற்றும் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.