காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, மேலாண் வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் ..!

753

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, உச்சநீதிமன்ற விதித்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ளநிலையில்,காவிரி மேலாண் வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த, மத்திய நீர்வள அமைச்சகம் ஏற்படுத்தி வரும் காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவில், எத்தனை பேர் இடம்பெறுவது, யாருக்கு என்ன அதிகாரம் என்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்கள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை நீதிமன்றமே தீர்க்க வேண்டும் என மத்திய அமைச்சரவைக்கு சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. எனவே, இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இருமாநில பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.