தமிழகத்துக்கு காவிரி நீரை எடியூரப்பா தருவார் – தமிழிசை சவுந்திரராஜன்

1038

தமிழகத்துக்கு காவிரி நீரை எடியூரப்பா தருவார் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், கர்நாடகா மட்டுமன்றி, தமிழக மக்களுக்கும் நன்மையே கிடைக்கும் என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி எவ்வளவுதான் பிரித்தாலும் சூழ்ச்சியை செய்தாலும் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக கூறிய தமிழிசை சவுந்திரராஜன், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் பிரச்சாரம் கர்நாடகாவில் எடுபடவில்லை என்றும், பிரிதாளும் சூழ்ச்சி பலிக்கவில்லை என்றும் தெரிவித்தார். கர்நாடக தேர்தலில் கடுமையாக உழைத்த பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு வெற்றியை சமர்ப்பணம் செய்வதாக அவர் கூறினார்.