விரைவில் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடப்போகிறது – தமிழிசை சவுந்திரராஜன்

733

விரைவில் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடப்போகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகரித்துவிட்ட நிலையில், அதை தடுக்க சென்ற காவலர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு தனது தவற்றை உணர வேண்டும் என அவர் கேட்டுகொண்டார். தொடர்ந்து பேசிய தமிழிசை, விரைவில் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடப்போகிறது எனவும், அதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், குட்கா விவகாரத்தில் திமுக வை சேர்ந்த நபருக்கு தொடர்பு இருப்பது பற்றி ஸ்டாலின் பேசுவாரா என கேள்வி எழுப்பினார்.