ஒகேனக்கல் பகுதியில் கன மழை | காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு.

688

ஒகேனக்கல் பகுதிகளில் பெய்யும் கன மழையினால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு ஆயிரத்து 800 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.