காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெறும்..!

614

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட நான்கு மாநில அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.காவிரி வழக்கில் ஆறு வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.