காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த மேலாண்மை ஆணையத்தை உனடியாக கூட்ட உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான கர்நாடக தரப்பு உறுப்பினர்களை விரைவாக நியமிக்க அம்மாநில முதலமைச்சருக்கு அறிவுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.மேலாண்மை ஆணைய செயல்பாட்டை தாமதப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை உடனடியாக கூட்ட உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அதேசமயம் காவிரி நீர் பங்கீட்டை மாதந்தோறும் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.