காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..!

281

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார்.இதனை வழி மொழிந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தும் தீர்மானம் இந்த கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.