தமிழகத்திற்கு இனி காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது. குடிநீருக்கே தண்ணீர் இல்லாதநிலை என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனு தாக்கல்.

258

தமிழகத்திற்கு இனி காவிரி நீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு டிசம்பர் 15ம் தேதி வரை 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. காவிரி நடுவர்மன்ற முடிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், காவிரி வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கர்நாடக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை நிலவுகிறது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு, தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என்று கூறியுள்ளது. அணைகளில் 15 டிஎம்சிக்கு குறைவாகவே தண்ணீர் உள்ளதாகவும் கர்நாடக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.