காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு : மத்திய அரசு இன்று வரைவு திட்டத்தை தாக்கல் செய்கிறது.

688

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், மத்திய அரசு இன்று வரைவு திட்டத்தை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம், 4 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு தரமாட்டோம் என்று கர்நாடக அரசு முரண்டுபிடித்து வருகிறது. இதனையடுத்து, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு கடந்த 8ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக தேர்தலை காரணம் காட்டி, மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டது. இதனை தொடர்ந்து 14ம் தேதி வரை அவகாசம் அளித்து நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். அதன்படி, காவிரி பங்கீடு தொடர்பான வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.