டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 14-வது ஆலோசனை கூட்டம்..!

131

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 14-வது கூட்டம் இன்று நடக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. கடந்த 8-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிடப்பட்டது. அதன்படி தொடர்ந்து பெய்த மழையால், தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகா கூடுதல் நீரை திறந்துவிட்டது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 14-வது கூட்டம், டெல்லியில் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.