காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் 2-வது கூட்டம் ஜூலை 19-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!

325

காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் இரண்டாவது கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் கடந்த 2 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில், காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கான 31 புள்ளி 24 டி.எம்.சி. தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் மத்திய நீர்வளத்துறை ஆணையர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

இதில், தமிழகத்தின் சார்பில் தலைமை பொறியாளர் செந்தில்குமார், தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், புதுச்சேரி தரப்பில் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோன்று, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் சார்பிலும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நீர் இருப்பு, நீர் திறப்பு, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தநிலையில், காவிரி நீர் ஒழுங்காற்