வெள்ளம் பாதித்த இடங்களில் நாளை முதல்வர் ஆய்வு..!

476

காவிரியில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதே போன்று பவானி, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகளிலுள்ள காவிரி கரையோர பகுதிகளிலும் முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
இதையடுத்து ஈரோட்டில் அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் வெள்ள நிவாரண பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.