காவிரியில் தற்போது வெள்ளம் இல்லை, பாசனத்திற்காக தண்ணீரே வந்து கொண்டிருப்பதாக தகவல் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

279

காவிரியில் தற்போது வெள்ளம் இல்லை, பாசனத்திற்காக தண்ணீரே வந்து கொண்டிருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியில் தண்ணீர் வருவது குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறினார். தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்கள் மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். குடிமராமத்து பணிகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக கூறிய அவர், அரசு சார்பில் அவசர தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விரைவில் முதலமைச்சர் வெளியிடவிருக்கும் 2018-2030 தொலைநோக்கு திட்டம், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி திட்டமாக இருக்கும் என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.