மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட பரிசுத் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய கொள்கைக் குழு தெரிவித்துள்ளது.

294

ரொக்க பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நிதி ஆயோக் எனப்படும் மத்திய கொள்கைக் குழு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில், தினமும் 15 ஆயிரம் அதிஷ்டசாலிகளை தேர்வு செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.