7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

268

இனியும் தாமதிக்காமல் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் இது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில் 7 தமிழர்களை 161 வது பிரிவின்படி விடுவிக்கலாம் என பல ஆண்டுகளாக பா.மக வலியுறுத்தி வந்தது சரி என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளார். இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு முடிவெடுத்து 7 தமிழர்களும் சுதந்திர காற்றை சுவாசிக்க வகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோன்று, தமிழக அரசு 7 தமிழர்களையும் 161 விதியின்படி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.