ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு..!

290

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசிஷ்டர் தலைமையில் குழு நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் நடந்த கலவரத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு குறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை ஏற்று தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்தது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பஞ்சாப்-அரியானா மாநிலங்களின் முன்னாள் நீதிபதி எஸ்.ஜே.வசிஷ்டர் தலைமையில் குழு அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலையின் மாசு குறித்து நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு செய்து 6 வார காரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.