பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு..!

172

சென்னை பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த வாரம் கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் நீண்ட நேரமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மின்சார ரெயில்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. கடற்கரை முதல் திருமால்பூர் வரை சென்ற மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணித்த 10 பேர் தடுப்புத்தூணில் மோதி கீழே விழுந்தனர். பரங்கிமலை அருகே சென்ற போது விபத்த நிகழ்ந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மற்ற 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயணிகள் இறப்புக்கு கூட்ட நெரிசலே காரணம் என கூறப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக 4 பிரிவுகளில் மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.