துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணை..!

234

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஒரு குற்ற சம்பவத்திற்காக 243 வழக்குகள் பதிவு செய்வதா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை 99 குற்ற சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாகவும், இதனால் 15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் வன்முறை மற்றும் 99 நாட்கள் நடைபெற்ற போராட்டம் தொடர்பான உளவுத்துறையின் அறிக்கையை சீலிட்ட கவரில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.