சமூக வலைதளங்களில் ஆதார் விவரங்களை பகிர வேண்டாம் – ஆதார் நிறுவனம்

429

சமூக வலைதளங்களில் ஆதார் விவரங்களை யாரும் பகிர வேண்டாம் என ஆதார் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஆதார் நிர்வனம் விடுத்துள்ள செய்தியில், ஆதார் எண் என்பது வெளிப்படையாக பகிரக் கூடியது அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது. தேவையான இடங்களில் மட்டுமே ஆதாரை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டையில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் குளறுபடி செய்ய முடியாது என்றாலும், சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆதார் எண் என்பதும் பொது இடங்களில் பகிர கூடியது அல்ல என்றும், பான், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்டவை இணைக்கப்படாமல் இருந்தாலும் ஆதார் எண்களை பகிர வேண்டாம் என ஆதார் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் அட்டையின் மூலம் ஒருவரின் வங்கி கணக்கை மற்றொருவர் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.