கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நாளை முதல் விற்பனை ஆகும் புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் கட்டாயம் ஆகிறது. இந்த நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கார்களை பொறுத்தவரை 3 ஆண்டுகளாகவும், இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை 5 ஆண்டுகளாகவும் இருக்கும் என்றும், இதை அனைத்து பொது காப்பீடு நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நீண்டகால காப்பீடு திட்டத்தால், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை உயரும் என கூறப்படுகிறது. காரின் விலை 5 ஆயிரம் முதல் 24 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரலாம் என்றும், இரு சக்கர வாகனத்தின் விலை 13 ஆயிர்ம் ரூபாய் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.