சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் குழந்தைகளுக்கான புற்றுநோய் வளாக விரிவாக்க திறப்பு விழா நடைபெற்றது.

அடையாறு புற்றுநோய் மையத்தில் 55 படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது மேலும் 25 படுக்கை வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் அடையாறு புற்றுநோய் மைய இயக்குனர் சாந்தா, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், திரைப்பட இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.