இந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட இந்திய நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ஐஸ்வர்யா அணிந்து வந்த உடை பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

849

இந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட இந்திய நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ஐஸ்வர்யா அணிந்து வந்த உடை பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
உலக திரைப்பட விழாக்காளில் முக்கியமான விழாக்களில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடக்கும் திரைப்பட விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற 70வது கேன்ஸ் திரைப்பட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டு, விதவிதமான போஸ் கொடுத்தனர். இந்த நிலையில், இந்திய நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனேவும் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டு பார்வையாளர்களை அசத்தினர். பச்சை நிற உடையில் தீபிகா படுகோனேவும், சின்ட்ரலா உடையில் ஐஸ்வர்யா ராயும் வந்து விதவிதமாக போஸ் கொடுத்தனர். இதில் ஐஸ்வர்யா அணிந்திருந்த சின்ட்ரலா உடை அங்கு கூடியிருந்த பிரபலங்களின் கவணத்தை மிகவும் ஈர்த்தது. ஐஸ்வர்யா ராய் இந்த விழாவில் கலந்து கொள்வது இது பதினாறாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.