இன்றைய ராசி பலன்கள்

எடுத்த வேலையை எளிதில் முடிக்கும் நாள். போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு.

வார பலன்கள்

மே மாதம் 22-ந்தேதி முதல் மே மாதம் 28-ந்தேதி வரை

வாரத்தின்முதல்நாளேமேஷராசிக்குசந்திராஷ்டமதினமாகஅமைவதால்இந்தவாரம்உங்களுக்குநன்மைகளும், தீமைகளும்கலந்தவாரமாகவும், எதிலும் தடைகள்உள்ளவாரமாகவும்இருக்கும். அதேநேரத்தில்யோகாதிபதிகளானசூரியன், குரு, சந்திரன்ஆகியோர்வலுவானஅமைப்பில்இருப்பதால்எதுவும்எல்லைமீறிபோகாமல்இருக்கும்வாரமாகவும்இருக்கும். ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர் களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம்.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரி களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரும்.. சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் மாத ஜோதிடம்

மே மாதம் 14-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை

மாதம் முழுவதும் மேஷநாதன் செவ்வாய் சனியுடன் இணைந்த நிலையில் இருக்கிறார். எனவே, இந்தமாதம் மேஷராசிக்கு தேவையற்ற மனக்கலக்கங்களும் சிறிய விஷயங்களை பெரிதாக்கி பார்ப்பதும், சிலருக்கு எதிர்காலத்தை பற்றிய கவலைகளும் உள்ள மாதமாக இருக்கும். அதேநேரத்தில் இது செலவு செய்யும் மாதமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணவரவும் இருக்கும்.

எனவே செலவை நினைத்துக் கலங்கத் தேவையில்லை. நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை வாங்குவீர்கள். பூர்வீகச்சொத்தில் ஏதாவது மனக்கஷ்டங்கள் வரலாம். வயதான அப்பாவை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள்..

சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ஆண்டு பலன்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்) மேஷராசிக்கு அஷ்டமச்சனி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த 2016 ஆங்கிலப் புதுவருடம் பிறக்கிறது.

ஆயினும் வருடம் பிறக்கும் முதல் நாளான புத்தாண்டு தினத்தன்று உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியை பார்க்கும் நிலையில் பிறப்பதால் புதுவருடம் உங்களுக்கு யோகமான வருடம்தான். இம்முறை வருடத்தின் முற்பகுதியான ஆகஸ்ட் மாதம் வரை குருபகவான் ஐந்தாமிடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பதால் அஷ்டமச்சனியின் கெடுபலன்களும் இந்த வருடம் உங்களுக்கு இருக்கப் போவது இல்லை என்பதும் ஒரு வகையில் உங்களுக்கு நல்லபலன்தான்.

மேலும் புதுவருடத்தின் பெரும்பகுதி மாதங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி நிலையிலும், நட்புநிலையிலும், உச்சநிலையிலும் இருப்பார் என்பதால் ராசிநாதனும், ராசியும் வலுவடைந்திருக்கும் காலங்களில் கெடுபலன்கள் எதுவும் நடக்காது எனும் விதிப்படி 2016-ம் வருடம் மேஷராசிக்கு சாதகமான நல்ல ஆண்டாகவே இருக்கும். அதேநேரத்தில் வருடத்தின் கடைசிமாதங்களிலும் அடுத்த வருட ஆரம்பத்திலும் அஷ்டமச்சனியின் தாக்கம் மேஷராசிக்கு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த வருடமே நீங்க புதிய முயற்சிகள் எதையும் தொடங்காமல் விழிப்புடன் இருப்பது நல்லது.

அஷ்டமச்சனி, ஏழரைச்சனி காலங்களில் சனிபகவான் புதிய தொழிலையோ, அல்லது வியாபாரத்தையோ தொடங்க வைத்து அதை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் புலிவாலைப் பிடித்த கதையாக அதன் போக்கில் ஓட வைப்பார் என்பதால் மேஷராசிக்காரர்கள் இந்த வருடம் தொழில், வியாபாரம் போன்றவைகளில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு இந்த நேரங்களில் இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிப்பதற்கு ஆசைவந்து அதைப் பறந்து பிடிக்கப்போய் “உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா” கதை வரும் என்பதால் வேலை பார்க்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

இருக்கும் வேலையை விடுத்து அடுத்த வேலைக்கு மாற நினைப்பவர்கள் கண்டிப்பாக வேலையில் இருந்து கொண்டே மாறுதலுக்கு முயற்சி செய்து அடுத்த வேலைக்கான உறுதி ஆர்டர் வந்த பின்பு இருக்கும் வேலையை விடுவது நல்லது. சிலநேரங்களில் வேலைமாற்றத்திற்குப் பின் முன்பிருந்த வேலையே அருமை என்று நினைக்க வைப்பார் சனி. முப்பது வயதுகளில் இருப்பவர்கள் இந்த வருடமும் அடுத்த வருடமும் செட்டிலாக விடாமல் அலைக்கழிக்க வைக்கப் படுவீர்கள்.

குறிப்பாக பொருளாதார சிக்கல்கள், பணவரவில் திருப்தியின்மை, பாக்கெட்டில் பணம் வைக்க முடியாத நிலை போன்றவைகள் இருக்கும். பிறந்தஜாதகத்தில் யோகவலுவுள்ள தசாபுக்திகள் நடக்கும். மேஷராசிக்காரர் களுக்கு மட்டும் நான் மேலே சொன்ன சாதகமற்ற பலன்கள் சற்று அடக்கி வாசிக்கப்படும். ஆயினும் அஷ்டமச்சனி என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது.

போன்ற வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தரும் என்பதால் இளைய பருவ மேஷராசிக்காரர்களைப் பொறுத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும். அதே நேரத்தில் இந்த வருடத்தின் முற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.

உடல்நலம் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகள் இருக்காது. புதிய கடன்கள் வாங்க வேண்டிய தேவையின்றி போதுமான வருமானம் தாராளமாக வரப் போகின்றது. எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு தந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். தந்தையால் செலவுகள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும்.

இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த பனிப்போர் விலகி இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க ஆரம்பிப்பீர்கள். வீட்டில் குழந்தையின் கொலுசுச் சப்தம் கேட்கும் காலம் பிறந்து விட்டது.

ஐந்தாமிடத்திற்கு ராகு மாற இருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் மேஷராசிக்காரர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். இந்த வருடம் அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளையபருவத்தினர் தங்களின் வாழ்க்கைத் துணைவரை இந்தவருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். காதல் வரும் வருடம் இது. சிலர் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள்.

தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள். மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் நீங்கள் என்பதால் அஷ்டமச்சனி பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. சனியை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். கையில் இருக்கும் சேமிப்பை சனி கரைய வைக்கும் அவ்வளவுதான். இந்த ஆண்டு உங்களுக்கு இனிமையான ஆண்டுதான்.

துன்முகி வருடம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

மேஷராசிக்காரர்களுக்கு புதிதாகப் பிறக்கும் துன்முகி ஆண்டு மாற்றங்களையும் படிப்பினைகளையும் தரும் ஆண்டாக இருக்கும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் தற்போது இருக்கும் நிலையில் இருந்து வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத மாற்றங்கள் வரும்.

இளையவர்களுக்கு வரப் போகும் மாற்றங்களினால் உங்களின் எதிர்காலத்திற்கான நன்மைகள் மட்டும்தான் இருக்கும் என்பதால் இளம்வயது மேஷராசிக்காரர்கள் இந்த தமிழ்ப் புத்தாண்டில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நடுத்தர வயது மேஷராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு இப்போது ராசிக்கு இருக்கும் குருபார்வை விலகுவதாலும் குருபகவான் ஆறாமிடத்திற்கு மாறுவதாலும் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பின்னடைவுகள் ஏற்படும் என்பதால் அனைத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது.

இந்த தமிழ்ப் புத்தாண்டில் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும்.

இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள் உண்டு.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும்.

குறிப்பிட்ட சிலர் அஷ்டமச்சனியால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்.

சிலருக்கு மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இருக்கும். யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும்.

கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும். பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய காலம் இது. பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும் எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும். நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள்.

அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம்.

குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது. பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ அல்லது மேலதிகாரிகளாலோ மதிக்கப்படும்.

சுபக்கிரகமான குருபகவான் ஆறாமிடத்திற்கு மாறப் போவதால் சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம்.

பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். மொத்தத்தில் மேஷராசிக்காரர்கள் நிதானமாகவும் பொறுமையுடனும் இருக்க வேண்டிய ஆண்டு இது.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேஷராசிக்காரர்களுக்கு சனிபகவான் ஏழாமிடத்திலிருந்து மாறி எட்டாம் இடத்திற்கு அஷ்டமச்சனியாக மாறுகிறார். சென்றமுறை ஏழாமிடத்தில் அவர் இருந்தபோது கணவன்மனைவிக்குள் பிரச்சனை, பொருளாதாரக்குறைவு, பங்குதாரர்களுக்குள் கருத்துவேறுபாடுகள், ஆரோக்கியக் குறைவு, மனச்சங்கடங்கள் போன்ற பலன்களைக் கொடுத்திருந்தார். இம்முறை அஷ்டமச்சனியாக அவர் வருவது நற்பலன்களைத் தராது என்றாலும் மனகலக்கம் எதுவும் தேவையில்லை.

ஏனென்றால் எப்போதுமே மேஷராசிக்கு மிகக் கடுமையான கெடுபலன்களை எட்டில் வரும் சனியால் செய்ய முடியாது. ஏனெனில் இப்போது சனிபகவான் எட்டாமிடமாக அமர்வதும் உங்கள் ராசிநாதன் செவ்வாயின் இன்னொரு வீடான விருச்சிகத்தில்தான் என்பதாலும் விருச்சிகத்தில் சனிபகவான் பகை நிலை பெற்று வலுக்குறைவதாலும் அவருடைய கொடிய பலன்களை மேஷராசிக்கு தரமாட்டார். இதற்கு உதாரணமாக சென்ற பெயர்ச்சியின் போது மீனராசிக்காரர்கள் பட்ட கடுமையான துன்பத்தைச் சொல்லலாம்.

சென்ற பெயர்ச்சியில் மீனராசிக் காரர்களின் ராசிநாதனான குருபகவானின் எதிர்க்கிரகமான அசுரகுரு சுக்கிரனின் வீட் டில் உச்சம் எனப்படும் மிக வலுநிலையைப் பெற்ற சனி மீனராசிக்காரர்களுக்கு கொடிய பலன்களைத் தந்தார். ஆனால் உங்கள் ராசிநாதனின் இன்னொரு வீட்டில் பகைபெற்று அமரும் சனி அதிகமான கெடுபலன் களை உங்களுக்குத் தரமாட்டார். மேலும் ஒரு துன்பம் வரும் பொழுது நம்முடைய ராசிநாதன் அல்லது ராசி வலுவாக இருந்தால் அதை சமாளிக்கக்கூடிய ஆற்றல் நமக்கு இருக்கும் என்பதால் அந்தக் கஷ்டம் பெரிதாக தெரியாது.

இம்றை சனிப்பெயர்ச்சி ஆனவுடன் 2015 ஜுலை வரை உங்கள் பாக்யாதிபதியும் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்க விடாமல் தடுப்பவருமான குருபகவானின் பார்வைக்குள் சனி வருவதால் ஆரம்பத்தில் உங்களுக்கு சனிபகவான் கெடுதல்களைத் தர முடியாது. அடுத்து 2015 ஜுலைக்குப் பிறகு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியால் சனிக்கு குருவின் பார்வை விலகினாலும் குருபகவான் ஐந்தாமிடத்திற்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கப் போவதால் உங்கள் ராசி வலுவாகும் என்பதால் 2016-ஜுன் வரை அஷ்டமச்சனியின் கெடுதல்கள் எதுவும் உங்களை பாதிக்காது.

2016 ஜுனுக்கு பிறகே அஷ்டமச் சனியின் பாதிப்புகளை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள் என்பதால் அதற்குப் பிறகு கண்டிப்பாக எந்த விஷயத்திலும் கவனமாகத்தான் இருக்க வேண்டும். அதேநேரத்தில் இன்னொரு பலனையும் சொல்கிறேன். அஷ்டமச் சனியின் பாதிப்புகள் முப்பதுவயதுகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிகமாக இருக்கும். அவர்களை தொழில், வேலை, திருமணம் போன்றவற்றில் செட்டில் ஆக விடாமல் தடுக்கும்.

அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய சில படிப்பினைகளைத் தரும். நடுத்தர வயதுக்காரர்களுக்கு நிச்சயமாக பெரிய கெடுதல்கள் எதுவும் கண்டிப்பாக இருக்காது. அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் வர வேண்டும் என்பதால் தொழில், வேலை விஷயங்களில் மட்டும் சில இடையூறுகளை சனிபகவான் தருவார். சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் ஜீவனஸ்தானத்தை பார்ப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கெடுதல்களை செய்வார்.

குறிப்பாக அஷ்டமச்சனி நேரத்தில் பணமின்றி நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதால் பணத்தைத் தரும் அமைப்புகளை சனிபகவான் பாதிப்பார். எனவே வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் இது. மேலதிகாரிகளிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. இந்த நேரத்தில்தான் பணசிக்கல்களும், கடன் தொல்லைகளும் வந்து முறைகேடான வருமானத்திற்கு ஆசைவரும் என்பதால் குறிப்பாக அரசுப்பணியாளர்கள் இதர வருமானங்கள் தரக் கூடிய நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேலையிழப்பு, தற்காலிக பணிநீக்கம் போன்ற அபாயங்கள் இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம். சுவருக்குக்கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமராகத்தான் இருக்கும். எதிரில் போட்டிக்கடை உருவாகும். இத்தனை காலம் உங்களிடம் வாடிக்கையாளராக இருந்தவர்கள் எதிர்க்கடைக்குச் சென்று உங்கள் வியாபாரத்தைக் குறைய வைப்பார்கள்.

எல்லாம் கொஞ்சகாலத்திற்குத்தான் என்பதை அறிந்து கொண்டு பொறுமையாக இருங்கள். இளையபருவத்தினருக்கு வேலை கிடைப்பது சிரமமாக இருக்கும். உங்களுடைய திறமைகளை பிறர் அறிய மாட்டார்கள். உங்களை விட திறமைக்குறைவான மேலதிகாரியுடன் வேண்டா வெறுப்பாக வேலை செய்ய வேண்டியிருக்கும். வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். அதேநேரத்தில் வெளிநாட்டில் தனிமைத்துயரை அனுபவிப்பீர்கள்.

ஆனால் அது இங்கே குடும்பத்திற்கு தெரியக்கூடாது என்று தொலைபேசியில் பேசும்போது சந்தோஷமாக இருப்பதாக நடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில்தான் காதல் வரும். கூடவே காதல் தோல்வியும் வரும். எனவே காதல் கத்திரிக்காய் என்று உங்களின் மேலான ஆக்கசக்தியை வீணாக இழந்து மனஅழுத்தத்தில் தவிப்பதை தவிருங்கள். குடிப்பழக்கம் இருப்பவர்கள் அஷ்டமச்சனி முடியும் காலம்வரை அந்தப் பழக்கத்தை நிறுத்துவது நல்லது.

குறிப்பாக குடித்துவிட்டு வண்டி ஓட்டவே செய்யாதீர்கள். விபத்து நடக்கிறதோ இல்லையோ தெருமுனையில் போலீஸ்காரர் ஊதும் கருவியுடன் இருந்து உங்கள் பாக்கெட்டை காலி செய்வார். பாருக்குள் நுழைந்தால் உங்களிடம் சண்டைப் போடுவதற்கென்றே இன்னொரு நபர் காத்துக் கொண்டிருப்பார். வம்பு, வழக்குகள் வரும் நேரம் இது. போலீஸ் ஸ்டேஷன் போகாதவர்களையும் கோர்ட்டு என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் அஷ்டமச்சனி அங்கே போக வைத்துவிடும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் எவரிடமும் வேண்டாம். நண்பர்களும் இப்போது விரோதியாவர்கள் என்பதால் எச்சரிக்கையாக இருங் கள். நடுத்தர வயதுக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டும். ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மேஷராசி பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்சனை எதுவும் இருக்காது.

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் பிரச்சனைகளால் மனக்கலக்கம் வரலாம். அதிர்ஷ்டம் கை கொடுக்காத நேரம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம். யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

மேஷராசிக்கு இதுவரை நான்காமிடத்தில் இருந்த குருபகவான் இந்தப் பெயர்ச்சியின் மூலம் மிகவும் நன்மை தரக்கூடிய இடமான ஐந்தாமிடத்திற்கு மாறி அற்புதமான நல்ல பலன்களை உங்களுக்கு தரப் போகிறார். தற்போது கோட்சாரக் கிரக அமைப்பில் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் இருந்து கொண்டிருக்கும் மேஷராசிக்காரர்களுக்கு இந்த ஐந்தாமிட குருப்பெயர்ச்சி யின் மூலமாக ராசிக்குக் குருபார்வை கிடைப்பதால் ராசி வலுவடைந்து சனியின் கெடுபலன்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு உங்களை பாதிக்காது என்பது இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நல்ல செய்தி.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே மேஷராசிக்கு சாதகமான கோட்சார நிலைமைகள் அமையவில்லை. அஷ்டமச்சனிக்கு முன்னால் ஏழாமிடத்தில் உச்சமாகி இருந்த சனிபகவான் பெரும்பாலான மேஷராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பிரிவினைகளையும், பிரச்சனைகளையும் கொடுத்திருந்தார்.. குருபகவானும் கடந்த இரண்டு வருடங்களாக மூன்று மற்றும் நான்காமிடத்தில் அமர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை செய்ய முடியாத அமைப்பில் இருந்தார்.

இந்த நிலைமைகள் நீங்கி குருபகவான் மேன்மையான பலன்களைத் தரும் ஐந்தாமிடத்திற்கு மாறப்போவதால் இனிமேல் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும். குருபகவான்தான் உங்கள் ராசிக்கு பாக்யாதிபதி எனும் யோகர் என்பதால் குரு பகவான் வலுபெற்று நல்லநிலைகளில் கோட்சாரரீதியாக வரும் போதெல்லாம் மிகவும் நன்மைகளை அடைவீர்கள் என்பதால் இன்னும் ஒரு வருடத்திற்கு உங்களுக்கு எல்லாவகையிலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து மேஷராசிக்கு மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது. உடலிலும் மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.

எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் உடனடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். குருபகவான் உங்களுடைய ராசியைப் பார்க்க போவதால் உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும். இது வரை இல்லாத தன்னம்பிக்கை உங்களைத் தேடி வந்து மனதில் குடி கொள்ளும்.

தலைநிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். தள்ளிப் போயிருந்த அதிர்ஷ்டதேவதை அருகில் வந்து உங்களை அணைத்து கொள்வாள். குறிப்பாக முப்பது வயதுகளில் இருக்கும் மேஷராசி இளைஞர்களுக்கு அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

ஏற்கனவே நல்லதொழில், வேலையில் இருப்பவர்களுக்குக் கூட கடந்த சில மாதங்களாக சனிபகவான் தடைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். தொழில் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் உங்களுக்கு நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும். சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு உடனே கிடைக்கும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு. ஐந்தாமிடதிற்கு மாறும் குருபகவான் தன்னுடைய நன்மை செய்யும் பார்வைகளால் ஒன்பது, பதினொன்று ராசி ஆகியவற்றைப் பார்ப்பார் என்பதால் அவரது ஒன்பதாமிடத்து பார்வை மூலம் இதுவரை கிடைக்காத தள்ளிப் போயிருந்த பாக்கியங்கள் அனைத்தையும் தற்பொழுது உங்களுக்கு கிடைக்கச் செய்வார்.

குறிப்பாக இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு தற்பொழுது குருபலம் வந்து விட்டதால் நல்லபடியாக திருமணம் நடக்கும். மேஷ ராசிக்காரர்கள் வீட்டில் இந்த குருப்பெயர்ச்சியால் நிச்சயமாக ஏதேனும் ஒரு சுபகாரியம் உண்டு. அதுபோலவே குருபகவான் புத்திரகாரகன் என்பதால் அவரது பாக்கிய ஸ்தானப் பார்வையால் இதுவரை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருளுவார்.

அதிலும் ஒரு விஷேச நிலையாக பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும். அதுபோலவே முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு குருபகவான் இரண்டாவது வாழ்க்கையை தற்பொழுது நல்ல விதமாக அமைத்து தருவார். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.

வயதான மேஷராசிக்காரர்கள் தற்பொழுது தாத்தா, பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வார்கள். ஆரோக்கியக் குறைவுகள் கட்டுக்குள் இருக்கும். ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள் குணமடையத் துவங்கும். புதிதாக எந்த வித மருத்துவச் செலவும் இந்த வருடம் இருக்காது. அடுத்து குருபகவானின் பதினொன்றாமிடப் பார்வையால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும்.

இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும். பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு இருக்கப் போவது இல்லை.

குறுப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எண்ணப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிதள்ளி போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும். அதே நேரத்தில் நீங்கள் இப்போது அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த வித புது முயற்சிகளும் தொழில் ரீதியாக செய்யாமல் இருப்பது நல்லது.

அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ வேறு எந்த வகையிலும் புதியவைகளை செய்வதோ வேண்டாம். தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இருக்கும் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, மேற்கொண்டு அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்சனைகளும் வரலாம். ஆறாமிடத்தில் ராகு இருப்பதால் இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும்.

கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள். மேஷராசிக்காரர்கள் அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்பதால் அஷ்டமச்சனி பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. சனியை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். கையில் இருக்கும் சேமிப்பை சனி கரைய வைக்கும் அவ்வளவுதான். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இதன் மூலம் உங்களுக்கு நடக்கும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

பெருந்தன்மையும், பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

நவக்கிரகங்களில் மிகுந்த பலம் பெற்ற கிரகமாக விளங்குவது உங்கள் ராசிநாதன் செவ்வாய் தான். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் உங்கள் உயிர்மூச்சாக இருக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் வரை உங்களுக்கு தூக்கம் வராது.

வம்பு, வழக்குகளில் சிக்குவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். வளைந்து கொடுத்துச் சென்றே காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர் நீங்கள். நெருக் கடிகளை கையாளும் கலை உங்களுக்கு அதிகம் இருக்கும். திடீர் என்று உணர்ச்சி வசப்படுவீர்கள். செல்லும் இடங்களில் எல்லாம் செல் வாக்குடன் திகழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.‘கணீர்’ குரலுக்கு சொந் தக்காரர்களாகவும், கடமை உணர்வு மிக்கவர்களாகவும் விளங்குவீர்கள்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படி இருக்கும்? என்ன மாற்றங்களை எல்லாம் கொடுக்கப் போகிறது? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பொதுவாக ஜாதகத்தில் 5, 9, 11 ஆகிய இடங்கள் பலம் பெற்றிருந்தால் பணப்பற்றாக்குறை ஏற்படாது. பொருளாதாரத்தில் போதுமான நிறைவு ஏற்படும். ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்’ என்பார்கள். அந்த அடிப்படையில் 5–ல் வரும் ராகு, செல்வ வளம் பெருக வழிவகுத்துக் கொடுக்கப் போகிறார். கேது, லாப ஸ்தானத்தில் வருவதால் பதினோராமிடம் புனிதமடைகின்றது. தேங்கிக் கிடக்கும் தொழிலை நடத்தி வைக்கும் ஆற்றல் சர்ப்ப கிரக ஆதிக்கத்திற்கு உண்டு. எனவே கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து தொழிலை விரிவு செய்யும் வாய்ப்பு உண்டு.

சொத்துக்களால் லாபம் பெறவைக்கும் ஐந்தாமிடத்து ராகு!
சொந்தங்களின் ஒத்துழைப்பை கூட்டும் லாப ஸ்தான கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தங்களது வான்வெளிப் பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிசெய்யப் போகிறார்கள்.

ஐந்தாமிடமான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும், பதினோறாமிடமான கும்ப ராசியில் சஞ்சரிக்கும் கேதுவும் பக்கபலமாக இருந்து உங்கள் சிக்கல்கள் தீர வழிகாட்டுவர். எனவே நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நம்பிக்கையோடு இருக்கலாம். புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு பிள்ளைகள் வழியில் சுபவிரயங்களை உருவாக்கும். வாயில் தேடி வந்து வரன்கள் முடிவாகும். கோவில், கோவிலாகக் கும்பிட்டதற்குப் பலன் எப்பொழுது கிடைக்கும்? ஆயுள் நன்றாக இருக்குமா? ஆதாயம் போதிய அளவு கிடைக்குமா? என்றெல்லாம் சிந்தித்த உங்களுக்கு, இப்பொழுது சிறப்பான பலன்களை ராகு அள்ளி வழங்கப் போகிறார்.

பூர்வ புண்ணியத்தின் வலிமையால் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். திடீரென வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீர்கள். ஸ்தல யாத்திரைகள் அதிகரிக்கும். வளர்ச்சிக்கு வித்திட்ட வர்களைச் சந்தித்து முக்கிய முடிவெடுப்பீர்கள். எண்ணங்கள் எளிதில் செயலாகும் இந்த நேரத்தில் எடுத்த காரியங்களை சுலபமாக முடிக்கும் வாய்ப்பு கிட்டும்.

மேலும் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும். தூர தேசத்திலிருந்து வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றலாகி வந்த இடமே நன்றாக உள்ளது என்று நிம்மதி அடைவீர்கள். பழைய கடன் களை அடைப்பதற்கான முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

பஞ்சம ஸ்தான ராகுவால் அஞ்சாத வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் பெருகுவதும் இக்காலத்தில் தான். பிரச்சினைகளுக்கு மத்தியில் பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்திணைவர். ராகுவிற்கும், கேதுவிற்கும் அர்ச்சனைகளைச் செய்து, ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் நன்மையே நடக்கும். அனுகூலமான நாளில் சர்ப்ப சாந்தி செய்தால் பிள்ளைகளின் சுபகாரியம் எளிதாக முடியும்.

அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிகப் பொறுப்புகள் வந்து சேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். உங்கள் சுய ஜாதகத்தில் 2, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில் ராகு இருந்தால் முறையாக சர்ப்ப சாந்திகளைச் செய்து கொள்ளலாம். செல்வ நிலையில் ஏற்ற இறக்கம் இல்லாமல், நிலையான செல்வம் வந்து நிம்மதியைக் கொடுக்க ராகு–கேதுக்களின் வழிபாடுகள் தான் தேவை.

நன்மைகளை வழங்கும் லாப ஸ்தான கேது!

உங்கள் ராசிக்கு பதினோறாமிடமான கும்ப ராசியில் கேது சஞ்சரிப்பது யோகம் தான். லாப ஸ்தானம் புனித மடைகின்றது. ஞானகாரகன் கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆன்மிகத்திற்கு என்று ஒரு தொகையை ஒதுக்கும் பொழுது, குடும்ப வாழ்க்கையிலும், தொழிலிலும் லாபம் வந்து கொண்டே இருக்கும். தொழில் வளர்ச்சி கூடும். பணப்புழக்கம், வரவு–செலவு திருப்தி தரும்.

பொதுவாகவே பதினோறாமிடத்தில் கேது வந்தால் பல வழிகளிலும் வரவைக் கொடுத்து, செலவையும் கொடுக்கும் என்பார்கள். மூத்த சகோதரர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் அகலும். இளைய சகோதரர்கள் எப்பொழுதுமே உதவிக்கரம் நீட்டுவர். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொன் கொழிக் கும் நேரமாகும். எண்ணியபடியே வெளிநாட்டுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள். கண்ணியம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். அனைவரும் உங்களைப் பார்த்துப் பாராட்டும் விதத்தில் வாழ்க்கை அமையப் போகின்றது.

வெளிநாடு செல்ல நினைப்பவர்கள், வீடு கட்ட நினைப்பவர்கள் சுய ஜாதகத்தைப் பரிசீலனை செய்து திசாபுத்தி பலமறிந்து செயல்படுவது நல்லது.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

ராகு சிம்ம ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது சூரியன், சுக்ரன், கேது ஆகிய மூன்றின் சாரத்திலும் சஞ்சரிக்கிறார். அதன் மூலமாக ஏற்படும் பலன்களை அறிந்து நாம் செயல்படுவது நன்மையை வழங்கும்.

சூரியன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): பிள்ளைகள் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற் கான அறிகுறிகள் தென்படும். குறிப்பாக, சென்ற ராகு பெயர்ச்சியில் தாமதமாக இருந்த சுபகாரியப் பேச்சுக்கள் இப்போது துரிதமாக நடைபெறும். இதுவரை பல நூற்றுக்கணக்கான ஜாதகங்களை பரிசீலனை செய்தும் அது பொருந்தவில்லை என்று வருத்தமடைந்து வந்தவர்கள், இப்போது மகிழ்ச்சியடையும் விதத்தில் மங்கல ஓசை இல்லத்தில் கேட்கும் வாய்ப்பு உருவாகப் போகின்றது.

குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியிலும் பலன் கிடைக்கும். இதுவரை எத்தனையோ முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்கள் இப்போது தேர்வில் பெற்றி பெறுவர். வேலை வாய்ப்பும் தேடி வரலாம். அதன்மூலம் உதிரி வருமானமும் கிடைக்கும்.

சுக்ர சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பலதரப்பட்ட வகைகளில் பணத்தேவைஏற்பட்டாலும் ஏதேனும் ஒரு முயற்சியின் மூலம் தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டே இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்கி அதில் வீடு கட்டிக் குடியேறலாமா? என்ற சிந்தனை ஒரு சிலருக்கு மேலோங்கும்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): பயணங்கள் அதிகரிக்கும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டுப் புதிய வாகனங் களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டு தொடர்பு எண்ணியபடியே வாய்க்கும் என்றாலும், எட்டில் சனி இருப்பதால் யோசித்தே ஏற்றுக்கொள்வது நல்லது.

பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!

கேது, கும்ப ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது குரு, ராகு, செவ்வாய் ஆகிய மூன்று சாரங்களிலும் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது எப்படிப்பட்ட பலன்களை நமக்கு வழங்குவார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

குரு சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட விரிசல் அகலும். இல்லத்தில் நீண்ட நாட்களாகத் தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். பங்காளிப் பகை மாறும். பாகப்பிரிவினை சம்பந்த மாக ஏற்பட்ட பஞ்சாயத்துக்களில் நல்ல முடிவு வரும். உடன்பிறப்புகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். கூட்டாளிகளை மாற்றம் செய்ய முன்வருவீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். அரசுவழிச் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்குத் தாமதம் ஏற்படும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். எந்த முயற்சியும் அதிகப் பிரயாசை எடுத்தே வெற்றி பெற இயலும்.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): உடல் ஆரோக் கியம் சீராக அமையும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வி.ஆர்.எஸ் பெற்றுக் கொண்டு சுயதொழில் செய்யும் அமைப்பு உருவாகலாம். எதிர்பார்த்தபடியே லாபம் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். இதுபோன்ற காலங்களில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஒருசிலருக்கு கோவில் திருப்பணிகளை முன்னின்று நடத்தும் வாய்ப்புகள் உருவாகலாம்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

ஐந்தாமிடத்து ராகு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி வழங்கவும், பதினோறாமிடத்து கேது பண வரவைப் பெருக்கிக் கொடுக்கவும் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று ஞாயிற்றுக்கிழமை தோறும் உமா மகேஸ்வரரையும், அம்பிகையையும் வழிபட்டு வருவதோடு, சஷ்டி விரதமிருந்து சண்முகநாதப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. சண்முகர் வழிபாடு சந்தோஷம் வழங்கும்.