உலகின் சமாதான இடமாக காந்தியின் சபர்மதி ஆசிரமம் திகழ்வதாக கனடா பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்..!

1296

உலகின் சமாதான இடமாக காந்தியின் சபர்மதி ஆசிரமம் திகழ்வதாக கனடா பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒரு வாரகால அரசு முறைப்பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார். தாஜ்மஹால் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சென்று பார்வையிட்ட அவர், குஜராத்தில் உள்ள காந்திஜியின் சபர்மதி ஆசிரமம் வந்தார். அப்போது, பாரம்பரிய கைத்தறி ஆடைகளை கனடா பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் அணிந்திருந்தனர். ஆசிரமத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்த அவர்கள் ராட்டையை நூற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
உலகிற்கு தற்போதைய தேவையான அன்பு, சமாதானம் வழங்கும் இடமாக கனடா பிரதமர் தெரிவித்தார். மேலும், டெல்லியில் அமைந்துள்ள சுவாமிநாராயண் ஆலயத்திற்கும் கனடா பிரதமர் குடும்பத்தினருடன் சென்றார்.