கஞ்சா பயன்படுத்த கனடா அரசு ஒப்புதல்..!

230

கஞ்சா உபயோகிப்பது தொடர்பான சட்ட மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்த பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. எனினும், ஒரு சில நாடுகளில் போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே 2001ம் ஆண்டு முதல் கனடாவில் மருத்துவத்திற்காக மட்டும் கஞ்சா உபயோகிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. முழுவதுமாக கஞ்சா உபயோகிக்க அனுமதியளிக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து கஞ்சா உபயோகிப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.