கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா விவகாரம் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ..!

581

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா விவகாரம் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை வெற்றிபெற செய்வதற்காக ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடியதாக வெளியான தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை மார்க் ஜுக்கர்பெர்க் ஒப்புக்கொண்டதை அடுத்து ஃபேஸ்புக் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் சடசடவென வீழ்ச்சியடைந்தன. இதனால் சமூக வலைதளத்தில் டெலிட் பேஸ்புக் என்ற ஹேஷ்டேக் வைரல் ஆனது. பலரும் ஃபேஸ்புக் அப்ளிகேஷனை தங்கள் மொபைலில் இருந்து நீக்கினார்கள். இதன் காரணமாக, பேஸ்புக் நிறுவனத்துக்கு பங்கு சந்தையில், இது வரை மூன்று லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.