கலிபோர்னியாவில் காட்டு தீயினால் மரங்கள் எரிந்து நாசம்..!

324

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிகழ்ந்த காட்டு தீயினால், பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாயின. BEVERLY மலை பகுதியில் உள்ள காட்டு பகுதியில் திடீரென காட்டு தீ ஏற்பட்டது. அதிக காற்று வீசியதால், மளமளவென வனப்பகுதி முழுவதும் தீ பரவியது. காட்டுத்தீயினால் அப்பகுதி முழுவதும் கடும் புகை எழுந்தது. புகைமூட்டத்தால் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அருகாமையில் இருந்த குடியிருப்புவாசிகள் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டனர்.. தீயை அணைக்கும் பணியில் 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் வனப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.