கலிபோர்னியா வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம் ..!

237

கலிபோர்னியா பெவர்லி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
பெவர்லி வனப்பகுதியில் திடீரென நிகழ்ந்த பயங்கர காட்டுத் தீயால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீயை அணைக்க ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீயை அணைக்கும் பணியில் சுமார் 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினருடன் இணைந்து போராடி வருகின்றனர். காட்டுத்தீயால் வெளியேறும் புகை காரணமாக, அப்பகுதிமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நாடி வருகின்றனர். இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது.