கலிபோர்னியாவில் 3-வது நாளாக காட்டுத்தீயை அணைக்க வீரர்கள் போராட்டம் | ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதம்..!

785

சூடான காற்று வீசுவதன் காரணமாக கலிபோர்னியாவின் வென்ட்ராரா பகுதியில் பற்றிய காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 3வது நாளாக போராடி வருகின்றனர்.
கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயினால் அங்குள்ள சுமார் நூற்றுக்கணக்கான வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின, 2500 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து காற்று வேகமாக வீசி வருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க 3வது நாளாக கடுமையாக போராடி வருகின்றனர். அமெரிக்காவில் இது வரை ஏற்பட்ட காட்டுத்தீயில் இது மிகவும் மோசமானது என தீயணைப்பு வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.