கலிபோர்னியா தொடர் கனமழையால் பெரும் நிலச்சரிவு மணலில் புதையுண்டு 13 பேர் பலி,மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்..!

402

அமெரிக்காவில் நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தெற்கு கலிபோர்னியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடும் நிலச்சரிவும் ஏற்பட்டு இருப்பதால், வீடுகளில் சேறு மற்றும் மண் சரிந்து மூடியதில் சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகி உள்ளனர். இதனிடையே, மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 700 பேர் கொண்ட மீட்பு குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் உதவியுடனும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.