அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத்தீயால், 44 ஆயிரத்து 450 ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி நாசமாகியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ரமென்டோ ஆற்றின் கரையோரம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில்,ஏராளமான மரங்கள், செடி கொடிகள் கருகின. மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தீயில் கருகி நாசமடைந்தன. காட்டுத்தீ வேகமாக பரவியதால் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு வீரர்கள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆபத்தில் உள்ளார்கள் என்றும், இந்த ஆண்டில் நான்கு மில்லியன் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் கலிபோர்னியா அரசு தெரிவித்துள்ளது.