கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர்…!

187

கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தின் சான்டா ரோசா பகுதியில், ஞாயிறு அன்று பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. 4 நாட்கள் விடமால் எரிந்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் போராடி வந்தனர். பாதுகாப்பிற்காக அப்பகுதிவாசிகள் வெளியேற்றப்பட்டனர். காட்டு தீயில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். 285 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 5 நாள் போராட்டத்திற்கு பிறகு காட்டுத் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தால் 2 லட்சம் ஏக்கர் வனப்பயிர்கள், 3 ஆயிரத்து 500 வீடுகள் சேதமடைந்துள்ளன.