கலிபோர்னியாவில் மாயமான இந்திய பெண்ணின் உடல் ஏல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது..!

3550

கலிபோர்னியாவில் மாயமான இந்திய பெண்ணின் உடல் ஏல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்த இந்தியரான சந்தீப், தனது மனைவி சவுமியா, மகன் சித்தாந்த், மகள் சாச்சி ஆகியோருடன் காரில் ஒரேகான் மாகாணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அந்நாட்டு போலீஸில் புகார் செய்தனர். இதனையடுத்து கார்பர் வில்லே என்ற இடத்தில் ஏல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காரின் பாகங்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதேசமயம் சவுமியாவின் உடலும் ஏல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும் காணாமல் போன மற்றவர்கள் குறித்த தகவல் கிடைக்காததால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.