அரசு கேபிள் டி.வி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

419

அரசு கேபிள் டி.வி நிர்வாகத்தை கண்டித்து, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட, புறநகர் கேபிள் ஆப்பரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும், அரசு கேபிள் டி.வி நிர்வாகத்தை கண்டித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த கேபிள் டி.வி ஆப்பரேட்டர்கள் பங்கேற்றனர். அப்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஏலம் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குற்றஞ்சாட்டினர்.