அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சி.வி.சண்முகம்

324

அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என தெரிவித்தார். மேலும், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு வரும் போது, தமிழக அரசு தனது கருத்துகளை தெரிவிக்கும் என, அவர் கூறினார். 18 எம்எல்ஏ-கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.