11-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் சி.பா.ஆதித்தனாரின் வரலாறு சேர்க்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

1176

11ம் வகுப்பு தமிழ் பாடத்தில் சி.பா. ஆதித்தனாரின் வரலாறு இடம் பெறும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், சிறப்பாக பணியாற்றிய 192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். 11-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் வரலாறு சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.