தமிழர் தந்தை என போற்றப்படும் சி.பா. ஆதித்தனாரின் 112வது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

421

தமிழர் தந்தை என போற்றப்படும் சி.பா. ஆதித்தனாரின் 112வது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சி. பா. ஆதித்தனார் தமிழக பத்திரிகையின் முன்னோடியாக திகழ்ந்தவர். 1942 ஆம் ஆண்டில், தமிழன் என்னும் வார இதழ் தொடங்கி, தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு கொண்ட செய்திகளையும், அரிய தகவல்களையும் ஆதித்தனார் வெளியிட்டு வந்தார். உயர்தட்டு மக்கள் மட்டுமே வாசிக்கும் தமிழ் மொழியை, எளிமைப்படுத்தி பாமரனும் படிக்கும் விதமாக மாற்றி சாதனை படைத்தார். இதனால், தமிழர் தந்தை என்று சி.பா. ஆதித்தனார் போற்றப்பட்டார். தமிழக மேலவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினராக ஆதித்தனார் அரும் பணியாற்றினார். 1969ம் ஆண்டு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று தனது சிறப்பான பணியால் அனைவரது பாராட்டையும் பெற்றார். சி.பா. ஆதித்தனாரின் 112வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சி. பா. ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு மாலை முரசு இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை எழும்பூரில் உள்ள சி. பா. ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு, தினத்தந்தி நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், VGP குழும தலைவரும், தொழில் அதிபரான V.G. சந்தோசம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் சி. பா. ஆதித்தனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோன்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மாலை அணிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வும் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆதித்தனார் திருவுருவச் சிலைக்கு, தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்ட மன்ற உறுப்பினர் விஜயதாரணி, முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும், ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆதித்தனர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஆதித்தனாரின் தமிழ் பணிகளை நினைவு கூர்ந்தார்.
முன்னதாக மாலை முரசு அலுவலகத்தில் நிகழ்ச்சியில் நிர்வாகிகளும், ஊழியர்களும் ஆதித்தனாரின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். எழும்பூரில் உள்ள ஆதித்தனாரின் சிலைக்கு மாலை முரசு நிர்வாகிகளும், ஊழியர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.