சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

303

சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழர் தந்தை என அழைக்கப்படும் சி.பா. ஆதித்தனார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் அருகேயுள்ள காயமொழியில் ஆதித்தனாரின் திருஉருவ சிலைக்கு பொதுமக்களும்,பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆதித்தனார் கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.