போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

271

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அம்மா குடிநீர் திட்ட துவக்க விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு, அம்மா குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர், மருத்துவர்களின் வேலை நிறுத்ததால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்தார். மேலும் மருத்துவ மேற்படிப்பு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்று கூறிய அவர், மருத்துவர்கள் வேலை நிறுத்ததை கைவிட கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு போக்குவரத்து துறை எந்தவிதமான லாப நோக்கமும் இன்றி செயல்படுவதாக கூறினார். பொதுமக்களின் நலனை குறிக்கோளாக கொண்டு தமிழக போக்குவரத்துத்துறை செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.