நெல்லை அருகே பேருந்தில் சக பயணிகளிடம் கொள்ளை அடிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து பாளையங்கோட்டை மேட்டு திடலுக்கு பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் பயணித்த இரண்டு பெண்கள் சக பயணிகளிடம் செயின் மற்றும் கைப்பையை கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை கண்டு சத்தமிட்டதை தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் இரண்டு பெண்களையும் பேருந்து நிலைய புற காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் திண்டுக்கல்லை சேர்ந்த இசக்கியம்மாள், மாரியம்மாள் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மீது போலீசார் கொள்ளை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.