கர்நாடகா அரசு சொகுசுப்பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து ஓட்டுநர், நடத்துனர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்..!

518

கர்நாடகா அரசு சொகுசுப் பேருந்து குளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தர்மஸ்தலா நோக்கி அரசு சொகுசுப் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. பேருந்து ஹசன் மாவட்டம் கரேகிரே என்ற இடத்தில் சென்றபோது, தரைப்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி, குளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து முழுவதும் நொறுங்கிய நிலையில், ஓட்டுநர், நடத்துனர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பா வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.