தமிழக அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

100

புதுச்சேரியில் தமிழக அரசுப்பேருந்து தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து, கனகசெட்டிக்குளம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது சிலர் வந்து பேருந்தை மறித்து நிறுத்தியுள்ளனர். பின்னர் பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறங்க செய்துவிட்டு, மர்ம நபர்கள் பேருந்துக்குத் தீ வைத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். தமிழக அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அரசு பேருந்துக்கு தீ விபத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.