காவல் உயர் அதிகாரிகளை போனில் மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜன் கைது..!

312

காவல் உயர் அதிகாரிகளை போனில் மிரட்டி வந்த புல்லட் நாகராஜன் பெரியகுளத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்த ரவுடி புல்லட் நாகராஜன், மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளாவையும், தென்கரை ஆய்வாளர் மதனகலாவையும் நாகராஜன் வாட்ஸ்-அப்பில் மிரட்டல் விடும் ஆடியோ வைரலாக சமூக ஊடகங்களில் பரவியது. நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். நேற்று காவல் துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் இன்று காலையில் தென்கரையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற புல்லட் நாகராஜனை பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.