கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது – ஆர்.பி.உதயகுமார்

145

சென்னை கந்தன்சாவடியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்தது வருத்தம் அளிப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்…

திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடிப்பாடுகளில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். புதிய கட்டிடம் கட்டும்போது உரிய விதிமுறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி பிரச்சாரம் செய்து வருவதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அவ்வாறு விதிமுறைகளை பின்பற்றினால் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என்று தெரிவித்தார்.