அத்துமீறி கட்டப்பட்ட 27 சுற்றுலா விடுதிகளுக்கு சீல் வைப்பு..!

237

நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணி தொடர்வதால், மசினகுடி பகுதி வியாபாரிகள் 3 நாட்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், கல்லாறு, கோத்தகிரி, மசினகுடி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை சீல் வைக்க உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்திலுள்ள யானை வழித்தடங்களில், 39 சுற்றுலா விடுதிகள், 309 அடுக்குமாடி கட்டடங்கள் கண்டறியப்பட்டன. இவற்றில் அத்துமீறி கட்டப்பட்ட 27 சுற்றுலா விடுதிகள் போலீஸ் பாதுகாப்புடன் உதகை கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

இன்றும் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சீல் வைக்கும் பணி தொடர்கிறது. இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில், சீல் வைக்கும் பணி தொடர்வதால், மசினகுடி பகுதி வியாபாரிகள் 3 நாட்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். யானை வழித்தடத்தில் கட்டுப்பட்டுள்ள வீடுகள், பள்ளிகள், கோவில்களை பாதுகாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மசினகுடி பகுதியில் வாகனங்கள் இயக்கப்படவில்லை.