கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து – ஒருவர் பலி

240

சென்னையில் புதிய கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்…

சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான கட்டிடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த தூண் மற்றும் சாரம் பாரம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 35 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்பட்ட நிலையில் பெரும்பாலானோரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 5 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன், மீட்பு பணிகளை விரைவுபடுத்தினார்.